முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கு தான் மனித இனத்திற்கு வேதனையைத் தரக் கூடிய கவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

Subbiahpatturajan

கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான்.

கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான்.
''  கவலைக்கு இடம் தராதீர்கள்..''
"இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழக் கற்றுக் கொள்"
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"
"பொறுத்தார், பூமியாள்வார்"
இப்படிப் பல பழமொழிகள்,நம் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருந்துமாறு நம் முன்னோர்கள் சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒரு நினைவில் சிக்கிக் கொண்டு அதைப் பற்றியே கவலை கொள்கிறது.அதில் இருந்து மீள்வது இல்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமான கவலைகள் இருக்கிறது. 

ஏன் கவலை வருகிறது?

நாம் நினைத்தது அல்லது எதிர்ப்பார்த்தது நடைபெறவில்லை என்றால், கவலை நம்மை ஆட்கொள்ளும்.
இந்த உலகில் கவலை இல்லாமல் மனிதர்கள் எங்கேயும் இருக்க முடியாது.. இருப்பவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். கவலைப்படும் போது அதைப்பற்றியே நினைத்துக் கொண்டே இருப்பார்கள்..

மனிதர்களின் இயல்பு 

நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்..என்ன செய்வது என்று தெரியாமல் படபடப்புடன் எப்போதும் காணப்படுவார்..
இந்தக் கவலைகள் என்பது ஒரு மனிதனுக்கு புற்றுநோயைப் போன்றது. 
புற்றுநோய் கிருமிகள் எப்படி உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு விரைவாக பரவுகின்றதோ,அதைப் போன்று கவலை என்பது ஒரு கவலை போய் இன்னொரு கவலையை உண்டாக்கும் சக்தி கொண்டது. 
கவலைகளை நம்முடைய மனத்துக்கு உள்ளேயே போட்டு அழுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும்.
இதனால்  மனச்சோர்வும், மனச்
சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம்.
எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை எல்லாம் விட்டு விட்டு அதில் இருந்து விலகி நின்று, வாழ்க்கைப் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாக சமாளிப்பது என்பதே முக்கியம்.
எந்த ஒரு இக்கட்டான சூழலையும் நம்மால் சமாளிக்க முடியும். எதையும் தீர அலசி ஆராய்ந்தால் தீர்வு  கிடைக்கும். 

வின்ஸ்டன் சர்ச்சில் 

அவர்கள் ஒருமுறை ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, கவலைப்படுவதற்கு எனக்கு நேரம் இல்லை என்றார். இதைக் கேட்டது ஒரு நிருபர். அந்த நிருபருக்கு ஒரே ஆச்சர்யம். 
என்னடா இது! கவலையில்லாத ஒரு மனிதனா? அல்லது கவலையைப் பற்றி நேரம் இல்லை என்று சொல்லும் ஒரு மனிதனா? என்று ஆச்சர்யம். 
வின்ஸ்டன் சர்ச்சில் அதற்குக் கூறிய விளக்கம்,
நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறேன். அதனால் எனக்கு கவலைப்படுவதற்கு நேரம் இல்லை என்று கூறினார். 
உண்மையிலேயே நல்ல பதில் மற்றும் உண்மை கூட.கவலைகளின் மூலகாரணத்திற்கு நம்முடைய கற்பனையும் ஒரு காரணமாகும். 
செய்தித்தாள்களில் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் விபத்து இல்லாத செய்தி என்பது அபூர்வமாகத் தான் இருக்கும். 
அது விமான விபத்தாக இருக்கலாம், பேருந்து விபத்தாக இருக்கலாம், அல்லது நடந்து செல்லும் போது வாகனம் மோதி இறந்த விபத்தாக இருக்கலாம்.
அதை நினைத்து நீங்கள் எங்குமே செல்லாமல் வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா? 
ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்றால் ஏதோ ஒரு வழியை உபயோகப்படுத்தித் தான் ஆக வேண்டும். நடந்து செல்ல வேண்டும் அல்லது ஏதாவது ஒரு வாகனத்தில் சென்று தான் ஆக வேண்டும், 
விபத்து நடக்கிறது என்று வீட்டுக்கு உள்ளேயே இருந்தால் என்ன நடக்கும்?கல் தடுக்கி விழுந்து பிழைத்தவனும் உண்டு, புல் தடுக்கி செத்தவனும் உண்டு, என்பது பழமொழி. 

கவலைகளின் தொழிற்சாலையே ஒருவருடைய மனது தான்.

 இங்கு தான் மனித இனத்திற்கு வேதனையைத் தரக் கூடிய கவலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
இந்தக் கவலைகளின் மூலப்பொருள் நினைவுகள். நினைவுகள் தான் ஒருவரின் கவலைக்கு முக்கியக் காரணம். நடந்துப் போனதை நினைத்துக் கவலை கொள்வதை விட்டு இனி நடக்கப் போவதை மட்டும் நினைவில் கொண்டு உற்சாகமாக செயல்படுங்கள்.

ஆம்.,நண்பர்களே.,

கவலைப்பட்டு, கவலைப்பட்டு மனம் நொந்து போய் விடாதீர்கள். 
மன வலிமையை இழந்து விடாதீர்கள். 
மனக்கவலைக்கு இடம் தராதீர்கள். 
எப்போதும் உற்சாகமாக இருங்கள். கவலைகளை தூக்கி வெளியே எறியுங்கள்......

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
கவலை இல்லா மனிதன் இல்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழர்கள் வரலாறு இந்திர விழா

Subbiahpatturajan #சினார்தமிழன் #தமிழர்கள் #இந்திரவிழா #இந்திரவிழா #bestarticalstamil2021 #cinartamilan தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது. சென்னி வெண்குடை நீட நபாயன் திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப் பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்  குவதோர் நன்னெ டும்பெருந் தீர்த்தமுன் னுடைய நவஞ்சிறந்தது வளம்புகார் நகரம் என்கிறது அந்தப் பாடல். அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு. தைப்பொங்கல் திருநாள்  அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம...

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' முழு பாடலும் அதன் பொருளும் முழுமையான விளக்கமும் .

Subbiahpatturajan பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்    பாடலின் வரிகள் உலக பாடத்தைச் சொல்லித் தருகின்றன.          சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஒன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது..... முழு பாடலும்... அதன் பொருளும்.... YouTube Channel Banner Visit Cinartamilan on YouTube Subscribe for the latest updates and exciting content! Subscribe Now " யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;..... சாதலும் புதுவது அன்றே;... வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே; மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புண...

பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது நல்லது.

Subbiahpatturajan *🌴🌴பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்🌴🌴* 🌴 ‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. 🌴 ‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். 🌴 குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. 🌴 நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்ற...